இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது -தமிழ்நாடு !

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், கடந்த சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே, இந்த முறையும் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுநரின் உரையில் என்ன விதானமான அறிவிப்புகளும், திட்டங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.