தமிழ்நாடு வந்தது கோவாக்சின் தடுப்பூசி !

கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இந்தியாவில் வரும் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படுவதற்காக 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 தடுப்பூசிகளை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இவற்றில் முன்னதாகவே 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அந்த தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் உள்ள சுகாதார மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின், 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. அதனை சுகாதாரத்துறைச் செயலர் பெற்றுக்கொண்டு பிறமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.