கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது எச்சரிக்கும் கல்வி இயக்குனர் !

கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்றன.

மேலும் செப் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரியில் 2 ம் ஆண்டு முதல் பயிலும் மாணவர்களுக்கும், முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது.

மேலும் அரசு இடஒதுக்கீட்டில் சேரும் பொறியியல் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறுகையில்,அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில்,இவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் முதலியவற்றையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரித்து உள்ளார்.

இதையும் படிங்க : சூப்பர்.. புதிய 70 மில்லியன் டெலிகிராம் பயனாளர்கள் !