பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

அக்டோபர் 7, 2021 வியாழக்கிழமை அதிகாலை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு மலைப் பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா, சிபி, ஹர்னாய், பிஷின், கிலா சைஃபுல்லா, சாமன், ஜியாரத் மற்றும் சோப் ஆகிய பகுதிகளை தாக்கியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இது 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று கூறியுள்ளது.மேலும் இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது எச்சரிக்கும் கல்வி இயக்குனர் !