ஆப்கான் தலிபான்களின் அடுத்த செக் !

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் முதலில் ஆட்சியில் இருந்து போது கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இனி இருக்காது என்று தெரிவித்தனர்.

ஆனால் தற்போது கடுமையான சட்டங்கள் அமலுக்கு வரும் நிலையில் உள்ளது என்று தெரியவந்துள்ளது.சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் தவறு செய்தல் கை கால்களை துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்துள்ளார்.

தற்போது கடந்த 20 ஆண்டுகளில் பெற்ற பட்டங்களால் எந்த பயனும் இல்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தலிபான்கள் அவர்கள் ஆட்சியில் இல்லை. எனவே 2000 முதல் 2020ஆம் ஆண்டு வரை பள்ளி, கல்லூாரி, பல்கலைக்கழகங்களில் படித்து மாணவர்கள் பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்று கூறி கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !