சூப்பர்.. புதிய 70 மில்லியன் டெலிகிராம் பயனாளர்கள் !

வாட்ஸ்அப்பை உள்ளடக்கிய ஃபேஸ்புக் குடும்பத்திற்குப் பிறகு, இன்ஸ்டாகிராம் உலகளாவிய அளவில் அதன் சேவையில் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் செயலிழப்பைச் சந்தித்தது.

இதன் காரணமாக 70 மில்லியன் யூசர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தற்போது டெலிகிராம் மெசேஜிங் செயலி புதிய பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. மேலும் டெலிகிராம் 70 மில்லியனுக்கும் அதிகமான புதிய பயனர்களைப் பெற்றுள்ளது.

இது குறித்து டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோ கூறுகையில்,ஒரே நாளில் மற்ற தளங்களை அணுகுவதைக் காட்டிலும் சுமார் 70 மில்லியன் புது யூசர்கள் டெலிகிராமுக்கு கிடைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !