கலப்பட டீசல் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொரோனா காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த 13 ம் தேதி தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பல குழுக்களாக பிரிந்து மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வாகன சோதனையில் பல ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அந்த டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

இந்நிலையில்,தமிழக அரசு கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.