அட..இது புதுசா இருக்கே..மாநில முதல்வருக்கு கோவில் !

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் மதுசூதனன் ரெட்டி கோவில் கட்டியுள்ளார்.முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திரா மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது.

இவர் மக்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறார்.மேலும் இந்த கொரோனா தொற்று இருக்கும் காலத்தில் திறம்பட செயல்ப்பட்டு வருகிறார்.இந்நிலையில்,சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் “ஜெகண்ணா நவரத்னா கோவில்“ என்ற பெயரில் ரூ.2 கோடி செலவில் கோவில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோவிலில் சிறப்பம்சம் என்னவென்றால் உண்டியலுக்கு பதில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது இது மக்களின் குறைகளை கேட்டறிய.

இதில் இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சிலை வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்டு இருக்கிறது.மேலும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் செம்பினால் செய்யப்பட்ட தூண்களில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.