90 ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த பிரபல VJ ஆனந்த கண்ணன் காலமானார் !

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஆனந்த கண்ணன்.சன் மியூசிக் என்ற சேனல் தொடங்கிய காலத்தில் பிரபல ஆர்ஜேவாக பணியாற்றியவர் விஜே ஆனந்த கண்ணன்.இவருடைய கலகலப்பான பேச்சினால் 90ஸ் கிட்ஸ்களை தன் வசம் ஈர்த்தவர்.

ஆர்ஜேவாகவும் பணியாற்றிய ஆனந்த கண்ணன், சிந்து பாத், விக்ரமாதித்தன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ஆனந்த கண்ணன் மரணமடைந்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்து இரங்கல் தெரிவித்தார்.அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் எந்த சிகிச்சையும் பலன் அளிக்காமல் தற்போது இறந்துள்ளார்.இதனை கேட்ட திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.