பிரபல இயக்குனர் சீனுராமசாமி தமிழில் தென்மேற்கு பருவக்காற்று,தர்மதுரை ,கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியுள்ளவர்.
இவர் இயக்கத்தில் உதயநிதி கண்ணே கலைமானே என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
அரசியலில் ஈடுபட்டு வருவதால் தற்போது அவரின் படங்கள் குறைந்துள்ளது.தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைப்பது ஒன்றும் புதிதல்ல.தற்போது இயக்குனர் சீனு ராமசாமி உதயநிதிக்கு மக்கள் அன்பன் என்ற பெயர் கொடுத்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் போஸ்டரை நேற்று முன்தினம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.அதில் சீனு ராமசாமி உதயநிதியை மக்கள் அன்பன் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி தான் மக்கள் செல்வன் என்று பெயர் சூட்டினார்.



