சூப்பர் அறிவிப்பு..தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் !

Tamil Naadu Government updates NEET Bill Opposition
தமிழ்நாட்டிற்கு '4.0' திட்டம் : இளைஞர்களை மையப்படுத்தி புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது தமிழக அரசு

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வர் ஆனார் ஸ்டாலின்.முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து அதிரடியாக புதிய திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார்.

தற்போது தமிழகத்தில் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் படி அரசு நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் 5 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூ.20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் காப்பீடு கட்டணமாக அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 300 பெறப்படுகிறது.

இதையும் படிங்க: என்னது தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையில்லையா.. வருகிறது ஜைகோவ்-டி!