என்னது தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையில்லையா.. வருகிறது ஜைகோவ்-டி!

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது மேலும் இதன் தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே மிக சிறந்த வழி.

அரசும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.மேலும் மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது ஜைடஸ் காடிலாவின் ஊசி இல்லாத கொரோனா வைரஸ் தடுப்பூசி-ZyCoV-D- அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் ஆகஸ்டு 20 ஆம் தேதி Zydus Cadila தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்று ஒப்புதல் கிடைத்தது.

ZyCoV-D என்பது கோவிட் -19 க்கான உலகின் முதல் பிளாஸ்மிட் DNA தடுப்பூசி ஆகும் இது மூன்று டோஸ் தடுப்பூசி ஆகும்.மேலும் இது 12 முதல் 18 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு இந்த தடுப்பூசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் செப் 16 வரை கனமழைக்கு வாய்ப்பு