காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் காலமானார்!

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.அவருக்கு வயது 80 .

கடந்த ஜூலை மாதம் தனது வீட்டில் யோகா செய்யும் போது தவறி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் உள்ள கட்டியை அகற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.

பெர்னாண்டஸ் UPA அரசாங்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் நெருக்கமானவராக கருதப்பட்டவர்.

இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்,அவர் குறிப்பிட்டுள்ளது,ராஜ்யசபா எம்பி ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஜியின் மறைவால் வருத்தப்படுகிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது இரங்கல் மற்றும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்து கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2010-ம் ஆண்டு மங்களூரு பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சூப்பர் அறிவிப்பு..தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்