கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு இன்று முதல் புதிய கரோனா தடுப்பு முறைகளை அறிவித்திருந்தது.அதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.
வழிபாட்டுத்தலங்களிலும் இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது.
மேலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது.



