கண் கருவளையம் மறைய இதை ட்ரை பண்ணுங்க !

முகத்தில் பெண்களுக்கு அழகு சேர்ப்பது கண்கள்.மௌனமான கண்கள் கூட ஆயிரம் கதை பேசும்.அப்படி பட்ட கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் முகத்தின் அழகு கெட்டுவிடும்.

தக்காளிப்பழத்துடன் ஆலோவேரா ஜெல் சேர்த்து நன்றாக சேர்த்து மசித்து விடவும். இதை கண்களில் கருவளையம் இருக்கும் இடம், கண்களை சுற்றி தடவி விடவும். இதை முகத்துக்கும் தடவலாம். பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி எடுத்தால் போதும். கண்களில் இருக்கும் கருவளையம் மறையக்கூடும்.

உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல் வைத்துக் கொண்டால்தான் கண்களுக்கு மிகவும் நல்லது.

முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறும் இவைகளை கலந்து எடுத்துக்கொள்ளவும்.ஒரு பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.