மாமல்லபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலை இடிக்க உத்தரவு !

சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னையை சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவர் கே.ஆர்.செல்வராஜ் குமார், ரேடிசன் புளூ ரிசார்டுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மாமல்லபுரம் கடற்கரை அருகே ரேடிசன் புளூ ஓட்டல் மற்றும் ரிசார்ட் அமைந்திருக்கிறது. கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகள்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் தான் கட்டிடங்கள் கட்டப்பட்டிருத்தல் வேண்டும்.

ஆனால் இந்த விதிகளுக்கு புறம்பாக ரேடிசன் புளூ நிர்வாகம் மாமல்லபுரத்தில் ரிசார்ட் கட்டிடம் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த ஆணையம், கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ள 1,100 சதுர மீட்டர் கட்டிடத்தை 2 மாதத்துக்குள் இடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கத்துக்காக ஓட்டல் நிர்வாகம் மாநில கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்துக்கு ரூ.10 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.