தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு !

Tamil Naadu Government updates NEET Bill Opposition
தமிழ்நாட்டிற்கு '4.0' திட்டம் : இளைஞர்களை மையப்படுத்தி புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது தமிழக அரசு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 ம் தேதி மற்றும் 9 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களும்.

மேலும் மற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் அறிவித்திருந்தார்.

இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் தேர்தல் நாளன்று பொதுவிடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : மாணவர்கள் கவனத்திற்கு..4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை !