மறைந்த பாடகர் எஸ்பிபி குறித்து ரஜினி உருக்கம் !

மறைந்த பாடகர் எஸ்பிபி கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.எஸ்பிபி பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது ரசிகர்களுக்கு அத்துப்படி.அந்த அளவிற்கு அவர் குரல் வளத்தின் தாக்கம் மக்களிடையே உள்ளது.

தமிழ் சினிமாவில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நிறைய பாடல்களை பாடியுள்ளார்.ரஜினியின் படத்தில் இவர் பாடிய பாடல் தான் முதன்மையாக வரும்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் அண்ணாத்த.மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.இந்த பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில்,ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் குறித்து உருக்கமான பதிவை ஒன்றை போட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது,45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

இதையும் படிங்க : தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு !