தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துவருகிறது.
மேலும் இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.இதில் நடிகையாக பூஜா ஹெக்டே நடிக்க செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ‘பீஸ்ட்’ படக்குழு அடுத்தடுத்து மூன்று அப்டேட்டுகளை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அக்டேபர் 13ஆம் தேதி நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அவரது கதாபாத்திரம் குறித்தான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தெரிகிறது.
அடுத்து அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டு முக்கிய அப்டேட்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : மறைந்த பாடகர் எஸ்பிபி குறித்து ரஜினி உருக்கம் !



