தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க இன்று டெல்லி செல்கிறார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வரானார்.முதல்வராக பொறுப்பேற்றபிறகு பல அதிரடி திட்டங்களை மக்களுக்காக அறிவித்தார்.
கடந்த மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றார். அந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில், குடியரசுத்தலைவரை அவர் சந்திக்கவில்லை.
இந்நிலையில், இரண்டாவது முறை யாக இன்று டெல்லி செல்கிறார்.கடந்த மாதம் 17-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.



