பளிச்சிடும் வெள்ளை பற்கள் பெற இதோ சில டிப்ஸ் !

எல்லோருக்கும் தனது பற்கள் அழகாக வெண்மை நிறத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும்.உங்கள் பற்களின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் நுட்பமானவை மற்றும் படிப்படியாக நிகழலாம். சில மஞ்சள் நிறம் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.

இதற்கு நாம் வீட்டில் இருந்தே சில பொருட்களை கொண்டு பற்களை அழகாக பராமரிக்கலாம்.முதலில் இதற்கு தீர்வு தினமும் இரண்டு முறை பற்களை துலக்குங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குங்கள் அதிகபட்சம் 2 நிமிடம் எடுத்து கொள்ளுங்கள். பற்களின் உள்ளே, வெளியே, மற்றும் மெல்லும் மேற்பரப்புகளை துலக்குங்கள்.

உங்கள் பற்களில் எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது வாழை தோல்களை தேய்த்தால் பற்கள் வெண்மையாகும்.ஆயில் புல்லிங் செய்து உங்களுடைய பற்களை வெண்மையாக்கிட முடியும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிக்கும் போது வாயிலிருந்து பிளேக் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குவதாக கூறப்படுகிறது, இது பற்களை வெண்மையாக்க உதவுகிறது.