தமிழகத்துக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு !

கர்நாடகாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ள‌ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியுள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 2282.12 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு விநாடிக்கு 17 ஆயிரத்து 859 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 15 ஆயிரத்து 488 கனஅடி நீர் திறந்துவிடப் பட்டுள்ளது. இதே அளவுக்கு நீர்வரத்து தொடர்ந்தால் கபினி அணை ஓரிரு தினங்களில் முழு கொள்ளளவை எட்டிவிடும்.தமிழகத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.