பட்ஜெட் தாக்கல்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் சபாநாயகர் அப்பாவு. ‘இந்த தடவை தமிழக சட்டசபையில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதன்பிறகு அவர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசத் தொடங்கினார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் கேட்கவில்லை.

இதற்கிடையே சபாநாயகர் குறுக்கிட்டு பேசினார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு,க. உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக தங்கள் இருக்கையில் அமர வேண்டும். இன்று முதன் முதலாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திங்கட்கிழமை விவாதம் நடைபெறும்.

அன்றைய தினம் உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம் திங்கட்கிழமை நீங்கள் பேசுவதற்கு உரிய வாய்ப்பு தருகிறேன்.

ஆனால் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அவர் பேசினார். அவர் கையில் இருந்த குறிப்புகளை பார்த்து வாசித்தார்.