எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார் – அன்புமணி ராமதாஸ் !

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையேயான தொகுதிப் பங்கீடு, சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் இறுதி செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியது , தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகளின் விவரம் பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார். மேலும் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தார்.