இயக்குநர் தேசிங் பெரியசாமி மற்றும் நிரஞ்சனியின் திருமண கொண்டாட்டம் !

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும் அதே படத்தில் நடித்த நடிகை நிரஞ்சனி அகத்தியன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், ரக்‌ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரிய வெற்றி பெற்றது.

இதில் நடித்த நிரஞ்சனி அகத்தியன் மற்றும் இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் தான் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நிரஞ்சனியின் முதல் சகோதரி குக் வித் கோமாளி ஷோவில் வரும் கனி தான்.இரண்டாவது சகோதரி நடிகை விஜயலக்‌ஷ்மி ஆகும் .