மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு – மம்தா எதிர்ப்பு !

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்குவங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மேற்கு வங்கத்தில் வன்முறைகள் சர்வசாதாரணமாக நாடாகும் , தேர்தல் நாட்களில் அதனை கூறவே வேண்டாம்.மேலும் தேர்தல் நேரத்தில் வன்முறை நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தலை மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளதாக கூறியுள்ளது.

இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது பாஜக வின் சதி என்று குற்றம் சாடியுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் மோடியும் அமித் ஷாவும் விரிவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாகவே இவ்வாறு தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.