நியூசிலாந்தில் இன்று முதல் ஏழு நாள் ஊரடங்கு அறிவிப்பு !

கரோனா தொற்று காரணமாக நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கிய கரோனா அந்த நாட்டில் வெகுவாக பரவவில்லை.மிகவும் குறைந்த அளவில் தான் பாதிப்பு இருந்தது.தற்போது ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேருக்கு இங்கிலாந்து புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இவர்கள் பல இடங்களுக்கும் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் ஆக்லாந்தில் நாளை காலை முதல் 7 நாட்களுக்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். 3ம் நிலை கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 3ம் நிலை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது