தமிழக சட்டசபையில் இன்று இ- பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.பட்ஜெட் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ,100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.மேலும்
ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக வழங்கப்படும் என்று, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம் என்று தெரிவித்தார்.



