அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு !

தமிழகத்தின் 2021-22 ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் டிஜிட்டல் முறையில் (இ- பட்ஜெட்) நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்றைய தினம் தாக்கல் செய்தார்.

இதில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.இதற்கு பலரும் வரவேற்கிறார்கள்.மேலும் திமுக ஆட்சியில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.