அனைவர்க்கும் தாங்கள் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.இதற்கு நீங்கள் அழகுநிலையம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டே இதை செய்யலாம்.
குங்குமப்பூ மற்றும் அதனுடன் அதிமதுரம் சிறிதளவு கலந்து 8 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.பிறகு அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் நல்ல மாற்றம் பெரும்.
இரவில் ஒரு 4 பாதாம் பருப்பை ஊறவைத்து மறுநாள் அதை பாலேட்டில் கலந்து முகம்,கை,கழுத்து போன்ற இடத்தில் பூசி 30 கழித்து கழுவினால் நல்ல வழவழப்பான சருமம் கிடைக்கும்.
வெள்ளரிக்காய் சாறு மற்றும் அதனுடன் பால் இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வர கண்ணாடி போன்று சருமம் மாறும்.இந்த குறிப்புக்கள் எல்லாம் வாரம் 2 அல்லது 3 முறை செய்துவந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.



