லெஸ்பியனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம்- ரெஜினா

லெஸ்பியனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதுமாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை என நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கொஞ்ச காலத்துக்கு பிறகு ரெஜினா என்ற திறமையான நடிகை இருந்தார் என்று பேசும்படி இருக்க வேண்டும்.

கதை கேட்டதும் அதில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதில் நடித்த பிறகு சாவாலான கதாபாத்திரம் கொடுத்தால் நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை வந்துள்ளது. எனவே இனிமேல் கவர்ச்சியை தவிர்த்து வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.” இவ்வாறு ரெஜினா கூறினார்.