சிதம்பரத்தில் தொடரும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் !

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கலை, அறிவியல், இசை, மருத்துவம் என பல்வேறு துறை படிப்புகள் வழங்கபட்டு வருகிறது. இங்கு நடைபெற்ற நிர்வாக குளறுபடியால் இப்பல்கலைக் கழகத்தை அரசு கையகபடுத்துவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அரசு கல்லூரியை விட 30 மடங்கு கூடுதல் கட்டணமும் வசூலிப்பதாக கூறி, கடந்த 47 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க அரசு கல்லூரி கட்டணமாக ரூ.13600, தனியார் கல்லூரியில் 3.80 லட்சமும் கட்டணமாக நிர்ணயித்துள்ள நிலையில் ராஜா முத்தையா கல்லூரியில் 5.6 லட்சம் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இதில் பேரணி, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், கருப்பு பலூன் பறக்கவிடுதல், மனித சங்கிலி, கண்ணீர் வடிக்கும் போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்கள் மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.