குடியரசு தினமன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறுமா !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் 11 கட்ட பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

மேலும், வரும் குடியரசு தினத்தன்று லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி நடக்கும் என்று தெரிவித்தினர். ஆனால், டெல்லி காவல்துறை சார்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடங்களை செயல்படுத்தால் இருப்பதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது.இதை விவசாயிகள் ஏற்கவில்லை.