டிஃப்பனி டிரம்ப் அசத்தல் நிச்சயதார்த்தம் !

அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் பதவி காலம் நேற்றோடு நிறைவடைந்தது .இன்று புதிய அதிபவராக ஜோ பிடென் பதவி ஏற்றுள்ளார்.மேலும் வெள்ளை மாளிகையின் இறுதி நாளை சிறப்பாக மற்றும் வகையில் டிரம்ப் தனது மகளின் நிச்சயதார்த்த விழாவை வெள்ளை மாளிகையில் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

மேலும் தனது வருங்கால கணவருடன் வெள்ளை மாளிகையில் தான் எடுத்தக் கொண்ட போட்டோவை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “எனது குடும்பத்தில் பல மறக்க முடியாத நினைவுகள், வரலாற்று நிகழ்வுகள், பல மைல்கற்களை கொண்டாடிய வெள்ளை மாளிகையில் எனது நிச்சயதார்த்தம் நடப்பதை கவுரவமாக நினைக்கிறேன்.

எனது வருங்கால கணவர் மைக்கேலுடன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை துவங்குவதை அற்புதமானதாக உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.