தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !

தண்ணீர் என்பது நம் உடலுக்கு கிடைத்த இயற்கை தந்த பரிசாகும்.தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவருகிறார்கள்.நாம் தண்ணீரை சரியான அளவு குடித்து வந்தால் நமக்கு வரும் நோய்கள் பாதியாக குறைந்து விடும்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் நச்சு பொருள்கள் வெளியாகிவிடும்.

காலையில் சாப்பிடாமல் வெளியில் செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் உடலின் மெட்டபாலிக் சதவீதம் அதிகரிக்கும், உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.