பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் மூன்று பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்தது.
இதையடுத்து, 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.இந்தநிலையில், சசிகலாவின் தண்டனைக் காலம் நிறைவுபெறவுள்ளதையடுத்து, எப்போது விடுதலை செய்யப்படுவார் என்று கேள்வி வந்தது.
மேலும்,ஜனவரி 27 காலை 10 மணி அளவில் சசிகலா விடுதலை செய்யப்படுகிறார் என்று அறிவிப்பை கர்நாடக சிறைத்துறை வெளியிட்டது.இந்தநிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிறை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவுக்கு சிகிச்சையளித்தனர். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



