தலைமுடி கொட்டுவதை தடுக்க மற்றும் அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க !

இப்போது இருக்கும் வாழ்க்கை முறையில் தலைமுடி உதிர்வு என்பது அனைவர்க்கும் இருக்கிற ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது.இதற்கு நம் வீட்டில் இருக்கும் சில பொருள்கள் கொண்டு தீர்வு காணலாம்.

முதலில் தேங்காய் எண்ணெய்(virgin oil ) கொஞ்சம் எடுத்து மிதமாக சூடு படுத்தி தலையின் அடிப்பாகத்தில் படும் படி நன்றாக தேய்க்க வேண்டும்.தேய்க்கும் பொது ஒரு நல்ல மசாஜ் தலைக்கு குடுக்கலாம்.

அடுத்து ஒரு ஹேர் பேக் போட்டுக்கொள்ளலாம் இதற்கு தேவையானவை 3 ஸ்பூன் கற்றாழை அதன் உள்பகுதி மட்டும்,ஒரு கைப்பிடி கருவேப்பில்லை ,துளசி இலை ஒரு கைப்பிடி,செம்பருத்தி இலை 4 ,ஊறவைத்த வெந்தயம் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் துருவல் .இதை நன்றாக அரைத்து கொள்ளவும்.தலையின் அடிப்பகுதி படும் படி இந்த பேக் ஐ தடவி கொள்ள வேண்டும்.ஒரு 30 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள்.

இதை வாரம் 2 முறை தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் இருக்காது.