ராகுல் காந்தி பிரதமர் மோடியை வேளாண் சட்டத்தில் மௌனம் காப்பதாக சாடியுள்ளார் !

டெல்லியில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது சரி இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.மேலும் அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகமான கேப்பிடல் ஹில் வன்முறைகள் குறித்து பேசும் மோடி நமது விவசாயிகள் போராட்டம் பற்றி பேச மறுப்பது ஏன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அவர் பேசியது , இந்த முறை டிரம்ப் சர்க்கார் என்று பிரதமர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு நாட்டின் பிரதமராக இதை நீங்கள் கூறக்கூடாது. ஏனெனில் நீங்கள் அமெரிக்க மக்களின் தீர்ப்பை அவமரியாதை செய்கிறீர்கள். எனவே அடிப்படைகள் பற்றி புரிதல் குறைபாடு உள்ளது. டிரம்ப் இப்போது தோற்றுப் போய்விட்டார் என்றார்.

அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகமான கேப்பிடல் ஹில் வன்முறைகள் குறித்து மோடி தனது சமூகவலைத்தள பதிவில், வாஷிங்டன் டிசியில் நடக்கும் வன்முறையையும், கலவரத்தையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அமெரிக்கத் தேர்தலுக்குப் பின் அதிகாரம் அமைதியான முறையில் மாற்றம் செய்யப்பட்டு தொடர வேண்டும். சட்டவிரோதப் போராட்டங்கள், எதிர்ப்புகள் மூலம் ஜனநாயகச் செயல்முறையைத் தகர்ப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மூன்று மத்திய வேளாண் சட்டங்கள் குறித்த சிறு புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட்டார்.