அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

இந்திய நேரப்படி இன்று இரவு 10.20 மணி அளவில் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார். அவருக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பதவியேற்ற பின் பேசிய ஜோ பைடன், ‘நான் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்றும் நான் அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.