செவ்வாய் கிரகத்திற்கு சென்றடைந்த தியான்வென்-1 விண்கலம் !

கரோனா தொற்று கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருந்து வருகிறது.பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கிய நிலையில் இருந்து தற்போது இந்தியாவில் அசுரவேகம் எடுத்துள்ளது.

இந்த வைரஸ் க்கு காரணம் சீனா என்று பல நாடுகள் கூறுகின்றன.ஆனால் தற்போது சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் தற்போது செவ்வாய்கிரகத்தில் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன.