உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக திருமாவளவன் நாளை பிரசாரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொண்டார்.

நாளை (24-ந் தேதி) சென்னையில் 6 தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

4 மணிக்கு திரு.வி.க. நகர், 5 மணிக்கு எழும்பூர், 6 மணிக்கு சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு திரட்டுகிறார். இரவு 7 மணிக்கு ஆயிரம் விளக்கு, இரவு 8 மணிக்கு துறைமுகம் தொகுதியிலும் ஆதரவு திரட்டுகிறார்.

25-ந் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம், மதியம் 12 மணிக்கு விக்கிரவாண்டி, மாலை 4 மணிக்கு திருசிற்றம்பலம், 5 மணிக்கு புதுச்சேரி உழவர்கரை, 6 மணிக்கு கண்டமங்கலம் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.