தெலுங்கானா சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தெலுங்கானா முதலமைச்சர் சந்திரதேசகர ராவ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.இந்த அறிவிப்பு தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு மிகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வால், ஒப்பந்த, வெளிப்பணி ஊழியர்கள் உள்ளிட்ட 9.17 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்கிறார்.
மேலும், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 61 ஆக மாற்றப்பட்டுள்ளது . ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடை தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.



