நினைத்ததை நடத்திக்கொடுக்கும் பைரவர் வழிபாடு !

பைரவர் இவர் சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவராக கருதப்படுகிறது.அனைத்து சிவன் கோவில்களிலும் , ஈசான்ய மூலை என்ப்படும் வடகிழக்கு திசையில் நீல மேனியாக அருள் தருபவர் ஸ்ரீ காலபைரவர்.

கால பைரவரை வணங்க ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது.பைரவரின் வாகனமாக இருப்பது நாய்.பொதுவாக பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீ காலபைரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தன லாபம், பயம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்களும் கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். பஞ்சதீபம் என்பது இலுப்பைஎண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய்எண்ணணை, நல்லெண்ணை, பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.