நடிகர் அக்ஷ்ய் குமாருக்கு கரோனா தொற்று !

கரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.அரசு கரோனா கால விதிமுறைகளை பின்பற்ற மக்களுக்கு மிகவும் அறிவுறுத்திவருகிறது.இந்நிலையில்,நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கும் தற்போது அதிகமாக பரவி வருகிறது.

தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மருத்துவர்கள் கூறும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிகிச்சை பெற்று வருவதாகவும் நான் விரைவில் குணமடைந்து விடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.