மாநகராட்சிப் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தடை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து பல அதிரடி உத்தரவுகளும், கடும் நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அவர்களுக்கு வேலை பார்க்க அனுமதி, கல்வி உரிமை என்றெல்லாம் பேசிய தாலிபான்கள் தற்போது எதிராக திரும்பியுள்ளனர்.பெண்கள் தனியாகச் செல்ல அனுமதி கிடையாது.

சாலைகளில் சுற்றித் திரியும் பெண்கள், தனியாக செல்லும் பெண்கள், சரியாக உடை உடுத்தாதவர்கள், கை மணிக்கட்டு, கால் தெரிந்தாலும் அடி. இசை கேட்பவர்களுக்கு தண்டனை விதவிதமான கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சிப் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது. பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே பெண்கள் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்