நீட் தேர்வு எழுதிய மாணவி மாயமானது தொடர்பான வழக்கில் போலீஸார் விசாரணை

தமிழகத்தில் நீட் தேர்வு 2017 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான இந்த நீட் தேர்வானது மாணவ, மாணவிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருவதோடு அவர்களது உயிரை குடிக்கும் எமனாகவும் மாறிவிட்டது. இந்த தேர்வால் இதுவரை தமிழகத்தில் 16 பேர் இறந்துவிட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2ஆவது முறையாக நீட் தேர்வு எழுதினார் மாணவி ஸ்வேதா.

இவர் தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நேற்று முன் தினம் காலை முதல் காணவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்காததால் பெற்றோர் நாமகிரிபேட்டை போலீஸில் புகார் அளித்தனர். அவர்கள் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த மாணவியின் தந்தை செந்தில்பாண்டியன், இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். ஸ்வேதா தனியார் பள்ளியின் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் சுவேதா நீட் தேர்வு எழுதினார். இந்த மாணவியின் தோழியிடம் விசாரணை நடத்தினர்.

சுவேதாவை போலீஸார் தேடுவதை கண்டு இருவரும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த தகவல் நாமகிரிபேட்டை போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்றுள்ளனர். அங்கு காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மாநகராட்சிப் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தடை

சுவேதாவை போலீஸார் தேடுவதை கண்டு இருவரும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த தகவல் நாமகிரிபேட்டை போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்றுள்ளனர். அங்கு காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.