நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று தொடங்குகிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு அச்சத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இதனை இந்திய துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக் கருதி அணைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.
நீட் தேர்வு ரத்து குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் கூட குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து 15ஆம் தேதி அறிவிக்கப்படும்- அன்பில் மகேஷ்



