நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து 15ஆம் தேதி அறிவிக்கப்படும்- அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் ஏற்கனவே 9ஆம் வகுப்பு முதல் +2 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாடு முதல்வர் சட்டசபையில் பேசும் பொழுது இது எனது அரசு இல்லை, நமது அரசு என்று குறிப்பிட்டார். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும்போது, அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டு இருக்கின்றனர்.

தொடர்ந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 15ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு வல்லுநர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் முடிவெடுப்பார். 40 முதல் 45 நாட்களுக்கு மாணவ மாணவிகளைப் பள்ளிக்கு வரவைப்பது தான் முக்கிய நோக்கம். இதற்காகப் புத்தாக்க பயிற்சிகள் நடத்தப்படுகிறது. அதன் பின்னரே முறையான வகுப்புகள் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை