தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை

தமிழகத்தில் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக , வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரக்கூடும்.

இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை மன்னார் வளைகுடாப் பகுதி, வட மேற்கு வங்க கடல் ,மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதி , தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் வாயிலாக திருமணம்..!