புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு

குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காந்திநகரில் இன்று நடைபெற்ற பா.ஜ.க.எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பூபேந்திர பட்டேல், புதிய முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குஜராத் மாநிலத்திலும் முதல்வராக இருந்த விஜய் ரூபானி ராஜினாமா செய்ததால் அடுத்த முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டது. அதன்படி இன்று குஜராத்தின் புதிய முதல்வரைத் தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

குஜராத் மாநில துணை முதல்வராக உள்ள நிதின் படேல், முன்னாள் குஜராத் அமைச்சர் கோர்தன் ஸடாஃபியா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் நிர்வாக அதிகாரி பிரஃபுல் கே படேல் ஆகியோரில் யாராவது ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனச் செய்திகள் வெளியானது.

புதிய முதல்வரைத் தேர்வு செய்ய இன்று மதியம் குஜராத் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதியம் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 2017 குஜராத் சட்டசபைத் தேர்தலில் காட்லோடியா தொகுதியில் (Ghatlodia) போட்டியிட்டு வென்றனர்.

கடந்த காலங்களில் அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திலும் முக்கிய பதவியிலிருந்தவர்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் – முதலமைச்சர்